விவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்

       பதிவு : Mar 17, 2018 11:45 IST    
பலரின் வரவேற்பை பெற்ற நடிகர் நரேனின் கத்துக்குட்டி படம் மீண்டும் திரையரங்குகளில் 23ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது. பலரின் வரவேற்பை பெற்ற நடிகர் நரேனின் கத்துக்குட்டி படம் மீண்டும் திரையரங்குகளில் 23ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது.

தமிழ் மற்றும் மலையாள நடிகரான நரேன், தமிழ் திரையுலகிற்கு 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, கத்துக்குட்டி, ரம் போன்ற படங்கள் வெளியானது. இதில் புது முக இயக்குனரான ஆர் சரவணன் இயக்கத்தில் 'கத்துக்குட்டி' படம் கடந்த 2015-இல் வெளியானது.

தமிழகம் மற்றும் விவசாயிகளின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்றவற்றை எடுத்துரைக்கும் படமாக இந்த படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நரேன் நன்றாக படித்திருந்தும் படிப்பிற்கான வேலையை செய்யாமல் சொந்த ஊரில் விவசாயத்திற்காக போராடுவார். தற்போதுள்ள சூழ்நிலையிலும் இளைஞர்கள் படிப்பை துறந்து விவசாயத்தில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

 

இதனால் இந்த படம் இளைஞர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் நரேன் காமெடியிலும் சிறப்பாக நடித்திருந்தனர். இந்த படத்தை தயாரிப்பாளர் ஆர் ராம்குமார், ஓன் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நரேனுக்கு ஜோடியாக நடிகை ஷரிஸ்டி டெஞ்ஜ் நடித்திருந்தார். தற்போது இந்த படம் மீண்டும் வரும் மார்ச் 23-இல் வெளியாகவுள்ளது.

தற்போதுள்ள தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக புதுப்படங்கள் வெளியாகாததால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.

 


விவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்