நட்சத்திர விழாவில் மோதும் கிரிக்கெட் அணிகள்

       பதிவு : Jan 06, 2018 15:36 IST    
celebrity cricket league teams and captains celebrity cricket league teams and captains

மலேசியாவில் இன்று நடைபெறும் நட்சத்திர விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட திரைப்பட நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ஒரே மேடையில் சந்திக்கின்றனர். இந்த நிகழ்ச்சில் கமல் மற்றும் ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த பேச்சு இருக்குமோ என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.  மலேசியா சென்றுள்ள ரஜினிக்கு மலேசியா பிரதமர் நஜீப் ரசாக் சிறப்பு விருந்தளித்துள்ளார். இவர் ரஜினியின் தீவிர ரசிகன். சென்ற முறை இவர் இந்தியா வந்தபோது ரஜினி அவருக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார்.

தற்போது மலேசியா வந்துள்ள ரஜினிக்கு பிரதமர் நஜீப் ரசாக் தனது மாளிகைக்கு வரவழைத்து சிறப்பு விருந்தளித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடனம், இசை மற்றும் கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகள் மற்றும் சில படங்களின் டீசர், ட்ரைலர், இசை போன்றவை வெளிவரவுள்ளது.  இந்த கிரிக்கெட் போட்டியில் நான்கு அணிகள் மோதுகின்றன. 'ராம்நாத் ரைனோஸ்' அணியை 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' தயாரிப்பாளர்கள் வாங்கியுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக நடிகர் விஜய் சேதுபதி தலைமை தாங்குகிறார். மேலும் நடிகர் சங்க தலைவர் விஷால் தலைமையிலான 'மதுரை காலைஸ்' அணியும், நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையிலான 'திருச்சி டைகர்ஸ்' அணியும், நடிகர் ஜீவா தலைமையிலான 'சேலம் சீட்டாக்ஸ்' அணியும் மோதுகின்றன.

celebrity cricket league teams and captainscelebrity cricket league teams and captains

செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்