நாச்சியார் சர்ச்சையால் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு

       பதிவு : Nov 25, 2017 13:35 IST    
naachiar movie issues naachiar movie issues

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி.பிரகாஷ், ரோக்லின் வெங்கடேஷ் என சிலர் நடித்து உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்த டீசர் இறுதியில் ஜோதிகா பேசிய ஒற்றை வார்த்தைக்கு பலரும் எதிப்புகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த வார்த்தைக்காக ஒரு பெரிய பூகம்பமே வெடித்தது.      

இந்நிலையில் நாச்சியார் டீசரில் இடம் பெற்றுள்ள சர்சைக்குரிய வசனத்தின் காரணத்தினால் இயக்குனர் பாலா, நடிகை ஜோதிகா இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ராஜன் என்பவர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் ''நாச்சியார் படத்தின் டீசரில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஜோதிகாவின் வசனம் இடம் பெற்றிருக்கிறது'' என்று   தெரிவித்திருந்தார்.  மேலும் இந்த மனுவின் விசாரணை வருகிற 28ம் தேதி நடைபெற இருக்கிறது.  

 

    


நாச்சியார் சர்ச்சையால் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்