ads

நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

வேலைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான படம் 'கோலமாவு கோகிலா'. லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் முன்னதாக சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோரை வைத்து 'வேட்டை மன்னன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் இந்த படம் இன்னும் தயாரிப்பாளர் பிரச்சனையில் சிக்கி கொண்டுள்ளது. இதன் பிறகு இவருடைய முதல் படமாக தற்போது 'கோலமாவு கோகிலா' வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா, தனது அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக வாழ்ந்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு எதிரே யோகி பாபு மளிகை கடை வைத்து அவரிடம் காதல் வயப்படுகிறார். சம்பளம் போதாமல் வறுமையால் தவிக்கும் நயன்தாராவிற்கு அவருடைய முதலாளி தொல்லை கொடுக்க வேறு வேளைக்கு செல்கிறார். இந்நிலையில் தனது அம்மாவான சரண்யா பொன்வண்ணனுக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. இதனை குணப்படுத்த லட்சக்கணக்கில் செலவாகும் என்று மருத்துவர்கள் அதிர்ச்சி தருகின்றனர். தன்னுடன் இருக்கும் பணம் போதாமல் தவிக்கும் நயன்தாரா, வேறு வழியின்றி போதை கடத்தல் கும்பலிடம் சிக்குகிறார். அவரை வைத்து போதை பொருளை கைமார்த்த அந்த கும்பல் திட்டம் தீட்டுகிறது.

இதற்காக நயன்தாராவின் தங்கையான ஜாக்கிலினை கடத்துகின்றனர். பிறகு வேறு வழியின்றி தனது தங்கையை காப்பாற்றவும், அம்மாவை காப்பாற்றவும் போதை கைமாறத்துவதற்கு உதவுகிறார்.  பின்னர் போதை கடத்தல் தலைவரிடம் அம்மாவின் சிகிச்சைக்காக பணம் பெறுகிறார். இறுதியில் போதை பொருளை கடத்தியதால் நயன்தாராவிற்கும், அவருடைய குடும்பத்திற்கும் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றன? அதனை சமாளித்து எப்படி மீண்டு வருகின்றனர் என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு, சாந்தமான பெண்ணாக கருதி நயன்தாராவை காதலிக்கிறார். ஆனால் அவருடைய போதை பொருள் கடத்தல் வேலைகளால் யோகி பாபுவும் பிரச்னைகளில் சிக்கி கொள்கிறார். இவருடைய காதலும், காதலால் இவருக்கு ஏற்ப்பட்ட தொல்லைகளும் ரசிகர்களிடம் கைதட்டலை பெறுகிறது. வழக்கமாக ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அசத்தி வந்த நயன்தாரா இந்த படத்தில் சாந்தமாகவும், ஆக்சனிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் டிவி மூலம் பிரபலமான தொகுப்பாளினி ஜாக்குலின், தன்னுடைய முதல் படத்திலே சிறப்பாக நடித்துள்ளார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், அறந்தாங்கி நிஷா, சரவணன் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். தனது ஒவ்வொரு படத்திலுமே தன்னுடைய இசையில் ரசிகர்களை கவர்ந்து வரும் அனிருத் இந்த படத்திலும் தன்னுடைய இசைஅமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருடைய இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிகர்களுக்கு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. தன்னுடைய முதல் படத்திலே காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் போன்ற அனைத்தையும் வித்தியாசமாக கையாண்டுள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம்