ads

நடிகை நயன்தாராவின் அயிரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த புதுப்பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த புதுப்பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா போன்ற படங்களுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம், விசுவாசம், சயிரா நரசிம்ம ரெட்டி, லவ் ஆக்ஷ்ன் ட்ராமா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இது தவிர மா, லட்சுமி போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் முன்னதாக 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படம் வெளியானது.

இந்த படத்திற்கு பிறகு நயன்தாராவை வைத்து த்ரில்லர் படத்தை உருவாக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த படத்திற்கு 'அயிரா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தாரா இரட்டை கதாபாத்திரத்தில் தோற்றமளிக்கிறார்.

இந்த படத்தினை ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இயக்குனர் சார்ஜுனின் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்திற்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி கேஎஸ் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகை நயன்தாராவின் அயிரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகை நயன்தாராவின் அயிரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்