ads

சைக்கோ படம் எனக்காக உருவாக்கப்பட்டது - கதறும் புதுமுக நடிகர்

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் பேத்தியின் கணவர் மிஸ்கின் மீது புகார் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் பேத்தியின் கணவர் மிஸ்கின் மீது புகார் கூறியுள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான மிஸ்கின், தனது 'துப்பறிவாளன்' படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் மற்றும் சாந்தனு ஆகியோரை வைத்து புதுப்படங்களை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்திற்கு 'சைக்கோ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறிமுக நடிகர் ஒருவர் என்பவர் மிஸ்கின் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக புகார் கூறியுள்ளார்.

இந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புதுமுகமான மித்ரேயா, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் பேத்தியான அபர்ணா குகன் என்பவரின் கணவர் ஆவார். இவர் இயக்குனர் மிஸ்கின் மீது அளித்த புகாரில் "ஜூலை 10, 2015 - நானும் மிஸ்கின் சாரும் ஒரு படம் பண்ண உடன்படிக்கை செய்தோம். இந்த படத்திற்கு மிஸ்கின் சார் இயக்குனர், நான் ஹீரோ, எங்க அப்பா தான் இந்த படத்தை தயாரிக்க இருந்தார். இதற்காக எங்க அப்பா, அவர் கிட்ட மிகப்பெரிய தொகையை தந்தார். அவர் என் அப்பா கிட்ட வேண்டுகோள் வைத்தார்.

மூணு மாசத்துல சவரகத்தி படத்தை முடிச்சுட்டு நவம்பர் 2015 நம்ம படத்தை துவங்குவோம்னு சொன்னார். ஆனா அந்த படம் குறிப்பிட்ட தேதியில முடிக்க முடியாம போச்சு. எங்களுடைய படத்தை மாஸ் மெகா பட்ஜெட் படத்தை உருவாக்க முடிவு செய்திருந்தோம். மார்ச் 2016, அப்போ மிஸ்கின் சார் கிட்ட பேசிய போது, விஷால் கிட்ட புதுசா படம் பண்ண பேசிருக்கன். ஒரு ஆறு மாதம் டைம் கொடுங்க. இத அப்பா, மகன் கிட்ட கேக்குற உதவியா நெனச்சுக்கோங்க. சாத்தியமா துப்பறிவாளன் கழிச்சு நம்ம படத்தை துவங்குவோம்னு சொன்னார்.

நான் இத அப்பா கிட்ட சொன்னான். அவரும் உடனே ஓகே சொன்னார். சரி நானும் அவருக்கு டைம் கொடுத்தன். ஆனா, துப்பறிவாளன் படம் முடிய 2017க்கு மேல ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் ஜூலை மாதத்துல, அவர் அலுவலகத்தில் உள்ள மேனேஜர் ஜுவல் கிட்ட பேசுனன், அப்போ, மிஸ்கின் சார் ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்காரு, உங்க கிட்ட கை நீட்டி காசு வாங்கிருக்காரு, கண்டிப்பா அடுத்த படம் உங்களோட பண்ணுவாருனு சொன்னார். அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, 'சைக்கோ' னு ஒரு படம் கமிட் ஆகிருக்கார்னு கேள்வி பட்டன்.இத பத்தி அவர் கிட்ட கேட்கும் போது, ஆமா, நான் சைக்கோ படத்துல கமிட் ஆகிருக்கன்.

உங்ககிட்ட படம் பண்ண மாட்டான், பணத்தையும் திருப்பி தரமாட்டேனு சொன்னார். அவருக்கே தெரியும் இந்த 'சைக்கோ' படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை தான். இதுக்காக தான் அவர் கிட்ட எங்க அப்பா அவர் கிட்ட மிகப்பெரிய தொகையை கொடுத்தார். இந்த மூணு வருசத்துல, என்ன, அந்த படத்திற்காக நிறைய பயிற்சி செய்ய சொன்னாரு. இதுக்காக போட்டோ சூட், டெஸ்ட் சூட் எல்லாம் பண்ணாரு. அதுல நான் நல்ல நடிச்சிருக்கனு கூட எங்க அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். ஆனா, இப்ப இந்த படத்தை வேற ஒருத்தர் கூட பண்றாரு.

அந்த படத்தோட கத என்னானு தெரியும். இந்த மூணு வருசத்துல என்கிட்ட நிறைய இயக்குனர்கள் வந்தாங்க. நான் மிஸ்கின் இயக்கத்தில் நடிச்சதுக்கு அப்புறம், கண்டிப்பா நடிக்கிறேன்னு சொன்னேன். இதெல்லாம் விட, எங்க அப்பா பணத்தை விட, அதிகமா அவருக்கு நிறைய மரியாதையும் அன்பும் கொடுத்தாரு. அதுக்கு மதிப்பே இல்லாம போச்சு. இப்ப எல்லாரும், உங்க கிட்ட அவர் சைன் பண்ண உடன்படிக்கை இருக்கு, கோர்ட்டுக்கு போங்கனு சொல்றாங்க. ஆனா இத நான் அவர் மண்சாட்சிக்கிட்ட ஒப்படைக்கிறேன்" என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து இயக்குனர் மிஸ்கின் தரப்பில் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

சைக்கோ படம் எனக்காக உருவாக்கப்பட்டது - கதறும் புதுமுக நடிகர்