நடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்

       பதிவு : Mar 17, 2018 14:41 IST    
பிரபல முன்னணி நடிகரான சம்பத் ராஜ் தற்போது பச்சோந்தி என்ற குறும்படத்தை இயக்கி வருகிறார். பிரபல முன்னணி நடிகரான சம்பத் ராஜ் தற்போது பச்சோந்தி என்ற குறும்படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களை நடித்துள்ள நடிகர் சம்பத் ராஜ் தற்போது ஆர்கே நகர் மற்றும் காலா படங்களில் நடித்துள்ளார். இவர் 2004-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 12 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவர் முக்கியமாக நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துள்ளார்.

இவர் தமிழ் திரையுலகிற்கு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான 'நெறஞ்ச மனசு' படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பருத்தி வீரன், சென்னை 28, சரோஜா, கோவா, தாமிரபரணி, அசல், ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டும் தற்போதுவரை 45 படங்களில் நடித்துள்ளார்.

 

நடிகரான இவர் தற்போது இயக்குனராக குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பச்சோந்தி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமூகத்தில் ஆண் ஆதிக்கத்தால் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஒரு குடும்பத்தலைவர், ஒரு இயக்குனர் மற்றும் ஒரு உயர் அதிகாரி என மூன்று ஆண் கதாபாத்திரங்கள் வைத்து படம் உருவாகி வருகிறது. இந்த படம் வெளியில் மனிதர்களின் தோற்றம் வெண்மையாக இருந்தாலும் உள்ளுக்குள் சாக்கடை, கூவம் போன்ற அழுக்கான எண்ணங்களை பற்று எடுத்துரைக்கிறது.

 


நடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்