ads

பிப்ரவரி 2 இல் வெளியாகவுள்ள படை வீரன்

padai veeran movie release on february 2

padai veeran movie release on february 2

 புதுமுக இயக்குனரான தானா இயக்கத்தில் நடிகர் மற்றும் பாடகரான விஜய் ஜேசுதாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'படை வீரன்'. இயக்குனர் தானா இந்த படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இந்த படத்தில் விஜய் ஜேசுதாஸ் மற்றும் இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் ஜேசுதாஸ் நாயகனாக நடித்துள்ளார். இவர் நடிகராக, தனுஷின் 'மாரி' படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர்களுடன் கல்லூரி படத்தில் அறிமுகமான அகில், மற்றும் அம்ரிதா, இயக்குனர் பாரதிராஜாவின் மைத்துனனான தயாரிப்பாளர் மனோஜ் குமார்,  கவிதா பாரதி, சிந்து, நிதிஷ், ஜெயசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் முதுமுகமான அம்ரிதா என்பவர் குறும்படங்களில் நடித்துள்ளார். இந்த குறும்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் இயக்குனர் தானா அவருக்கு வாய்பளித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இவர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரரும், இசைஞானி இளையராஜாவின் மகனுமாவார்.

இந்த படத்தை இவோக் நிறுவனம் சார்பில் மதிவாணன் தயாரித்துள்ளார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை புவன் ஸ்ரீநிவாசன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் அமைந்துள்ளது. இதில் 'லோக்கல் சரக்கா பாரின் சரக்கா' என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். மேலும் இவன் சங்கர் ராஜா, ஹரிச்சரன், சின்மயி, முகேஷ் ஆகியோர் இந்த படத்தில் பாடியுள்ளார். இந்த படத்தின் நாயகனான விஜய் ஜேசுதாஸ் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். நடிகர் மற்றும் பாடகரான விஜய் ஜேசுதாஸ் நாயகனாக அறிமுகமாகும்  இந்த படம் அடுத்த மாதம் பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2 இல் வெளியாகவுள்ள படை வீரன்