ads

'பேய் பசி' டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடக்கும் திகில் - இயக்குனர் ஸ்ரீநிவாஸ்

'பேய் பசி' டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடக்கும் திகில் - இயக்குனர் ஸ்ரீநிவாஸ்

'பேய் பசி' டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடக்கும் திகில் - இயக்குனர் ஸ்ரீநிவாஸ்

இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'பேய் பசி'. இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன் சார்பில் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரித்துள்ளார். சோனி சானின் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர், விபின், நமீதா, டேனியல், பகவதி பெருமாள் உள்ளிட்ட  பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் கருணாகரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து இயக்குனர் ஸ்ரீநிவாஸிடம் பேசும்போது அவர் " ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டாரை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. வேலையே இல்லாத நேரத்தில் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு திகில் என்றால் என்னவென்பதை இந்த படம் உணர்த்தும். இந்த படம் ஒரே இடத்தில் நடந்தாலும் சுவாரஸ்யத்திற்கு குறைவு இருக்காது.

படத்தின் தலைப்பை பற்றி ஆலோசிக்கும்போது இந்த 'பேய் பசி' என்ற பெயர் நினைவுக்கு வந்தது. இதைவிட பொருத்தமான தலைப்பு இந்த படத்திற்கு வேறெதுவும் அமையாது. படத்தின் தலைப்பிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு தரமான சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளோம் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது படத்திற்கு முக்கிய பலமாகும். திகிலின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது அவரது இசை." என்று தெரிவித்துள்ளார்.

'பேய் பசி' டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடக்கும் திகில் - இயக்குனர் ஸ்ரீநிவாஸ்