'இரும்பு திரை' படத்தின் வில்லனாக என்னுடைய குரு - விஷால்

       பதிவு : Nov 13, 2017 10:45 IST    
'இரும்பு திரை' படத்தின் வில்லனாக என்னுடைய குரு - விஷால்

நடிகரும் திரைப்பட சங்க பொது செயலாளர் விஷால் மலையாளத்தில் 'வில்லன்' படத்தின் மூலம் மிகுந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இதனை அடுத்து இவர் 'சண்டக்கோழி 2' மற்றும் 'இரும்புத்திரை' படங்களில் தற்போது நடித்து வருகிறார். இரும்புத்திரை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இதனை அடுத்து டிசம்பரில் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். இதனால் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்புகள் சற்று தாமதமாகியுள்ளது. 

'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' இவ்விரு படங்களையும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. 'இரும்புத்திரை' படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இந்த படத்தில் விஷால், சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை வரும் பொங்கலுக்கு வெளிவிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

'இரும்புத்திரை' படத்தை பற்றி அவர் கூறும்போது " என்னுடைய வாழ்க்கை ஒரு வட்டமாகவே காணப்படுகிறது. நான் யாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேனோ அவரே எனக்கு வில்லனாக அமைந்துள்ளார். அவர்தான் நடிகர் அர்ஜுன். இப்போதுவரை அவர்தான் எனக்கு குரு. இந்த படத்தில் நாங்கள் சந்திக்கும் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கும். முக்கியமாக கிளைமேக்சில் நாங்கள் மோதிக்கொள்ளும் காட்சியில் எங்களுடன்  இணையை காத்திருங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.


'இரும்பு திரை' படத்தின் வில்லனாக என்னுடைய குரு - விஷால்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்