ads

பேராண்மை இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகவுள்ள ராஜராஜா சோழன்

இயக்குனர் எஸ்பி ஜனநாதன் சோழ மன்னர் ராஜராஜ சோழனின் சரித்திர கதையை படமாக்க முடிவு செய்துள்ளார்.

இயக்குனர் எஸ்பி ஜனநாதன் சோழ மன்னர் ராஜராஜ சோழனின் சரித்திர கதையை படமாக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயற்கை, ஈ, பேராண்மை போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்பி ஜனநாதன். இவருடைய இயக்கத்தில் இறுதியாக கடந்த 2015இல் வெளியான படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவியின் 'பூலோகம்' படத்திற்கும் வசன எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

பேராண்மை இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகவுள்ள ராஜராஜா சோழன்

இதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு சரித்திர படத்தை பிரமாண்டமாக இயக்க முடிவு செய்துள்ளார்.இவருடைய அடுத்த படம் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவரான ராஜ ராஜ சோழனின் வரலாற்று கதையை சார்ந்ததாக உருவாக உள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் சரித்திர படங்களுக்கு நல்ல வரவேற்புகள் இருந்து வருகிறது. பாகுபலி படத்திற்கு பிறகு ஏராளமான இயக்குனர்கள் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து சரித்திர படங்களை உருவாக்கி வருகின்றனர்.

பேராண்மை இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகவுள்ள ராஜராஜா சோழன்

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் எஸ்பி ஜனநாதனும் இணைந்துள்ளார். இந்த படத்திற்காக நீண்ட காலமாக தஞ்சாவூரில் தங்கி ராஜ ராஜா சோழன் கதை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சரித்திர கதை என்பதால் இந்த படமும் மூன்று பாகங்களாக உருவாக்க முடிவு செய்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது.

பேராண்மை இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகவுள்ள ராஜராஜா சோழன்