ads

சீம ராஜாவில் ராஜா கதாபாத்திரத்தின் ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் பொன்ராம்

சீம ராஜா ட்ரைலரில் இடம்பெற்ற ராஜாதி ராஜா கதாபாத்திரத்தின் ரகசியத்தை இயக்குனர் பொன்ராம் வெளியிட்டுள்ளார்.

சீம ராஜா ட்ரைலரில் இடம்பெற்ற ராஜாதி ராஜா கதாபாத்திரத்தின் ரகசியத்தை இயக்குனர் பொன்ராம் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வரும் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகவுள்ள படம் 'சீம ராஜா'. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் அடுத்ததாக வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் இசை போன்றவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

முன்னதாக வெளியான இந்த படத்தின் ட்ரைலரில் சிவகார்த்திகேயன் 'இது வரைக்கும் என்ன சீம ராஜாவா தான பாத்திருக்க, இனிமே ராஜாதி ராஜாவா பாப்ப' என்று டயலாக் பேசி முடிக்கும் போது சிவகார்த்திகேயன் ராஜா கேரக்டரில் என்ட்ரி கொடுப்பார். இந்த கதாபாத்திரத்தினை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. தற்போது இந்த படத்தின் இயக்குனரான பொன்ராம் இந்த கதாபாத்திரத்தின் ரகசியத்தினை தெரிவித்துள்ளார்.

இந்த படம் குறித்து அவர் கூறுகையில் "இந்த படம் முழு கமர்சியல் என்டர்டெயினர் படமாக இருக்கும். சிவகார்த்திகேயன், சூரி காம்போ முந்தய இரண்டு படங்களை போல் இந்த படத்திலும் ரொம்பவே சிறப்பாக அமைந்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கமும் சரி, ரஜினி முருகனும் சரி அடுத்தடுத்து மாறுதல்கள் இருக்கும். அதே போல் இந்த படத்திலும் காட்சிகள் முழுவதும் மாறுதலாகவே இருக்கும். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

இருவருடைய சந்திப்பு காட்சியே சிறப்பானதாக இருக்கும். இவர்களுடைய காதல், ரொமான்ஸ் காட்சிகள் அருமையாகவே உருவாகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் புது விதமாக இருக்க டிஜிட்டல் பையோஸ்க்கோப் உபயோகப்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் முக்கியமான நகரங்களுக்கு டிஜிட்டல் பையோஸ்க்கோப் வரும்.

இதில் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல் போன்ற அனைத்தும் காணலாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் ராஜா கதாபாத்திரம் ரகசியமானது. இந்த கதாபாத்திரம் பாடலில் மட்டும் வராமல் இந்த கதாபாத்திரத்திற்கு தனி பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனக்கு தளபதியை வைத்து படம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அவருக்கான கதையையும் உருவாக்கி வருகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

சீம ராஜாவில் ராஜா கதாபாத்திரத்தின் ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் பொன்ராம்