ads

விஜய் அவார்ட்ஸ் விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள விஜய் அவார்ட்ஸின் விருப்பமான நடிகர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள விஜய் அவார்ட்ஸின் விருப்பமான நடிகர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி குழுவினரால் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கும், சிறந்த படங்கள், இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களையும் கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விஜய் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2016-17 ஆண்டுகளில் விஜய் விருதுகள் வழங்கப்படாத நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ளது. 2006இல் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விஜய் விருது வழங்கும் விழா இறுதியாக 2015வரை 9முறை நிகழ்ந்துள்ளது.

இறுதியாக நடந்த விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் (வேலையில்லா பட்டதாரி), சிறந்த இயக்குனராக கார்த்திக் சுப்பராஜ் (ஜிகர்தண்டா), சிறந்த நடிகையாக அமலாபால், விருப்பமான நடிகராக ரஜினிகாந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பிறகு 10வது விஜய் விருது வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில் இந்த விருதுகளுக்கான சிறந்த படங்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் போன்றோர் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

தற்போது விருப்பமான நடிகர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் கடந்த ஆண்டு வெளியான படங்களின் நாயகர்கள் நடிகர் அஜித் குமார் (விவேகம்), சூர்யா (சிங்கம் 3), நடிகர் கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று), நடிகர் விஷால் (துப்பறிவாளன்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் விருப்பமான நடிகராக தேர்வு செய்யப்படும் நடிகர் யார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் காணப்படுகிறது. தற்போது ஏராளமான ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகருக்கு வாக்களித்து வருகின்றனர். 

விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வான அஜித்குமார் சூர்யா.விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வான அஜித்குமார் சூர்யா.
விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வான கார்த்தி விஷால்.விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வான கார்த்தி விஷால்.

விஜய் அவார்ட்ஸ் விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர்கள்