ads

மொரிஸியஸில் துவங்கிய பிரபுதேவாவின் தேவி 2 படப்பிடிப்பு

இயக்குனர் ஏஎல் விஜய் மற்றும் பிரபு தேவா கூட்டணி மூன்றாவது முறையாக

இயக்குனர் ஏஎல் விஜய் மற்றும் பிரபு தேவா கூட்டணி மூன்றாவது முறையாக 'தேவி 2' படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மொரிசியஸ் தீவில் துவங்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2016இல் வெளியான படம் 'தேவி'. பிரபு தேவா, தமன்னா, சோனு ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஏஎல் விஜய் மற்றும் பிரபு தேவா கூட்டணி 'லக்ஷ்மி' படத்தில் இணைந்தது. கடந்த மாதம் ஆகஸ்ட் 24இல் வெளியான நடனத்தை மையமாக கொண்ட இந்த படமும் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் ஏஎல் விஜய் மற்றும் பிரபு தேவா கூட்டணி 'தேவி 2' படத்தின் மூலம் இணைந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பிரபு தேவா மொரிசியஸ் தீவிற்கு சென்றுள்ளார். இந்த படப்பிடிப்பில் நடிகை கோவை சரளாவும் இணைந்துள்ளார். முன்னதாக 'லக்ஷ்மி' படத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்த கோவை சரளா மீண்டும் ஏஎல் விஜய்யின் 'தேவி 2' படத்தில் இணைந்துள்ளார். இதற்கான புகைப்படத்தை பிரபு தேவா தற்போது வெளியிட்டுள்ளார். தேவி படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான இந்த படமும் திகில் படமாக உருவாக உள்ளது. இதற்காக திகிலான உண்மை சம்பவத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் ஏஎல் விஜய். 

மொரிஸியஸில் துவங்கிய பிரபுதேவாவின் தேவி 2 படப்பிடிப்பு