ads
பிரபுதேவாவின் குலேபகாவலி திரைவிமர்சனம்
ராசு (Author) Published Date : Jan 12, 2018 17:54 ISTபொழுதுபோக்கு
கடந்த 2016-ஆம் ஆண்டில் வெளியான 'கதை சொல்ல போறோம்' படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடன புயல் பிரபுதேவா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'குலேபகாவலி'. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபு தேவா நடிப்பில் வெளிவரவுள்ள படம் என்பதாலும் பொங்கல் பண்டிகை என்பதாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியது. முன்னதாக வெளிவந்த இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் போன்றவை படத்தின் எதிர்பார்ப்புக்கு பலமாக இருந்தது. இந்த படத்தில் பிரபுதேவா, மன்சூர் அலிகான் மற்றும் யோகிபாபு ஆகியோரில் சிலை கடத்தும் கும்பலில் வேலை பார்க்கிறார்.
ஹன்சிகாவை ஒரு பார்ட்டியில் பார்த்து அவரிடம் காதல் வயப்படுகிறார். படத்தின் ஒரு கட்டத்தில் மன்சூர் அலிகான் 'குலேபகாவலி' என்ற இடத்தில் உள்ள சிலையை கடத்த வடஇந்தியரிடம் ஒப்பு கொண்டு அட்வான்ஸ் வாங்குகிறார். சிலை திருட போன புதையல் இருப்பதாய் அறிகிறார். கோடிக்கணக்கான வைரங்களை 'குலேபகாவலி' கோவிலில் வெள்ளைக்காரனிடம் வேலை பார்த்த ஒருவர் மறைத்து வைத்து இறக்கும் போது அவரது மகனான மதுசூதனன் ரவிடம் தெரிவிக்கிறார். காவல் அதிகாரியாக சத்யன் சிலை மற்றும் புதையல் திருடும் கும்பலை பிடிக்க முயல்கிறார்.
இவர்கள் அனைவரும் இணைந்து யார் புதையலை எடுக்கிறார்கள்? எடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் நாயகனாக பிரபுதேவா ஆக்சன், காமெடி, ரொமான்ஸ், நடனம் போன்ற அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது வரை புது புது கதாபாத்திரத்தில் நடித்த ரேவதிக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் ஒரு கட்டத்தில் ஹன்சிகா புதையலை எடுக்க முயல்கிறார்.
ஆனால் தனது தங்கையை காப்பாற்றவே புதையலை எடுக்க வந்தேன் என்று டிவிஸ்ட் கொடுக்கிறார். இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் ஆகியோர் காமெடியில் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் ஆரம்பம் முதல் இறுதிவரை புதையலை தேடி அலையும் புதுவிதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் கல்யாண்.