ads

யங் மங் சங் படத்தின் மூலம் பாடலாசிரியரான பிரபு தேவா

யங் மங் சங் படத்தில் பிரபு தேவா, நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் முதன் முறையாக பாடல் வரிகளை அமைத்துள்ளார்.

யங் மங் சங் படத்தில் பிரபு தேவா, நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் முதன் முறையாக பாடல் வரிகளை அமைத்துள்ளார்.

நடிகர், நடன ஆசிரியர், இயக்குனர் போன்ற பல துறைகளில் சாதனை புரிந்துள்ள பிரபு தேவா 'யங் மங் சங்' படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் மாறியுள்ளார். புது முக இயக்குனரான எம்எஸ் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் 'யங் மங் சங்' படத்தில் பிரபு தேவா கும் பூ மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 1970 மற்றும் 1980 காலங்களில் நடக்கும் கதைகளை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

யங் மங் சங் படத்தின் மூலம் பாடலாசிரியரான பிரபு தேவா

இந்த படத்தில் பிரபு தேவாவின் மாமன் மகளாக லட்சுமி மேனனும், பிரபு தேவாவின் அப்பா கதாபாத்திரத்தில் இயக்குனர் தங்கர் பச்சானும் நடித்து வருகின்றனர். ரேடியோ ஜாக்கியான ஆர்ஜே பாலாஜி 'மங்' என்ற கதாபாத்திரத்தில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். முன்னதாக பிரபு தேவா மற்றும் 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபாகர் ஆகியோரது காட்சிகள் படமாக்கப்பட்டது.

யங் மங் சங் படத்தின் மூலம் பாடலாசிரியரான பிரபு தேவா

இதன் பிறகு தற்போது இந்த படத்தின் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றது. இதில் இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு பிரபு தேவா பாடல் வரிகளை அமைத்துள்ளார். கமலின் 'விஸ்வரூபம்' படத்தில் 'உன்னை காணாது நான்' என்ற பாடலை பாடியுள்ள பாடகர் சங்கர் மகாதேவன் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகின்றது. 

யங் மங் சங் படத்தின் மூலம் பாடலாசிரியரான பிரபு தேவா