ads

கும்கி இயக்குனருடன் இணைந்த ராணா

prabhu solomon next movie rana daggubati

prabhu solomon next movie rana daggubati

கும்கி 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் இயக்குனர்  பிரபு சாலமன் பாகுபலி புகழ் ராணா டகுபதி நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தினை எடுக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் எடுக்க இருக்கும் இப்படத்தின் 'ஹாத்தி மேரே சாத்தி' டைட்டில் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.    

கும்கி, கும்கி 2 படங்களில் ஒரு யானை இடம் பெறுவது போன்று ராணா நடிக்கவிருக்கும் படத்திலும் யானை இடம் பெற இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்புகள் தாய்லந்து அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்புகள் நடக்கவிருப்பதாகவும் வந்த தகவலில் கூறப்படுகின்றனர்.    

பல வருடங்களுக்கு முன்பு ராஜேஷ்கன்னா நாயகனாக நடித்து ஹிந்தியில் வெளிவந்த  ‘ஹாத்தி மேரே சாத்தி’ படத்திற்கு மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் தலைப்பினை வைத்திருக்கும் இயக்குனர் பிரபு சாலமன் வியக்க தக்க வெற்றி பெறுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 

கும்கி இயக்குனருடன் இணைந்த ராணா