ads

இசைஞானிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்

இசைத்துறையில் சாதனை படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசு தலைவர் பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.

இசைத்துறையில் சாதனை படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசு தலைவர் பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.

ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இசைஞானி இளையராஜா அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன் படி நேற்று இசைஞானி இளையராஜாவுக்கு, நமது நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த யோகா கலைஞர் நாகம்மாள், தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசாமி, இசைக்கலைஞரான அரவிந் பாரிக் ஆகியோருக்கும் குடியரசு தலைவர் தனது கைகளால் விருது வழங்கி கவுரவித்தார்.

இதில் ஒன்பது பேருக்கு பத்ம பூஷன் விருதும், மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்தார். இந்த விருது வழங்கும் விழாவில் துணை குடியரசு தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது டிவிட்டரில் இசைத்துறையில் அவர் அளித்த பங்களிப்பிற்கு கவுரவித்ததாக தெரிவித்துள்ளார் 

இசைஞானிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்