ads

சிவாவின் தமிழ்ப்படம் 2 படத்தில் இணைந்த தயாரிப்பாளர்

producer sashikanth acting in tamizh padam 2 movie

producer sashikanth acting in tamizh padam 2 movie

இயக்குனர் மற்றும் பாடலாசிரியரான சிஎஸ் அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் 'தமிழ்ப்படம்'. இந்த படத்தின் மூலம் இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் பறவை முனியம்மா வில்லியாக நடிக்க சிவா நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை திஷா பாண்டே நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மற்றும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் அடுத்ததாக 'தமிழ்ப்படம் 2.0', 'ரெண்டாவது படம்' போன்ற படங்கள் தயாராகி வருகிறது. இதில் 'தமிழ்ப்படம் 2.0' படம் இவருடைய அறிமுக படமான 'தமிழ்ப்படம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது.

முதல் பாகத்தில் தமிழ் சினிமாவை கலாய்க்கும் படமாக ரசிகர்களுக்கு அமைந்தது. தற்போது 'தமிழ்ப்படம் 2.0' தற்போதுள்ள அரசியல் சூழலை கலாய்க்கும் விதமாக உருவாகி வருகிறது. முன்னதாக வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் துணை முதலமைச்சரை கலாய்க்கும் விதமாக அமைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போதுள்ள சூழல், அரசியல்வாதிகளின் ஓரிரு வார்த்தைகள் மூலம் சமுக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் உருவாகும் மீம்ஸ்களால் பொழுது போக்கிற்கு பஞ்சமில்லாமல் மீம்ஸ்கள் நிரம்பி வழிகிறது. ஆகையால் சிவாவின் 'தமிழ்ப்படம் 2.0' வெளிவந்தால் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை ‘Y NOT ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் எஸ் சசிகாந்த் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் இணைந்துள்ளார். இவர்களுடன் காமெடி நடிகர்களாக சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் சசிகாந்த் நடிகராக இந்த படத்தில் இணைந்துள்ளதாக இயக்குனர் சிஎஸ் அமுதன் அவரது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு வாழ்த்து தெரிவித்து 'ஒரு நாயகன் உதயமாகிறான்' என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

சிவாவின் தமிழ்ப்படம் 2 படத்தில் இணைந்த தயாரிப்பாளர்