ads

தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வெளியிட்ட 6 அத்தியாயம் படத்தின் ட்ரைலர்

6 athiyayam movie official trailer released by producer sr prabhu

6 athiyayam movie official trailer released by producer sr prabhu

தமிழ் சினிமாவில் திரைக்கு வரும் ஒவ்வொரு படங்களின் கதைக்களமும் வித்தியாசமாக புது வித அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கும். பெரும்பாலான படங்களை ஒரு ரசிகராகவும், பொழுதுபோக்கிற்காகவும் காண செல்கின்றனர். ஆனால் சில படங்கள் தான் நல்ல கதை, மாறுபட்ட அனுபவம், பயனுள்ள கருத்து போன்றவை அமைந்து மக்களிடம் பிரபலமடைந்து மாபெரும் வெற்றி அடைகிறது. அப்படி வித்தியாசமான முறையிலும், மாறுபட்ட முயற்சியிலும் உருவாக்கப்பட்டது தான் இந்த '6 அத்தியாயம்'. இந்த படத்தில் அப்படி என்ன வித்தியாசம் என்றால், இந்த படத்தை ஆறு இயக்குனர்கள், 6 வித்தியாசமான கதைகளை ஒன்றிணைத்து உருவாக்கியுள்ளனர்.

இந்த படத்தை எழுத்தாளர் மற்றும் 'தொட்டால் தொடரும்' படத்தின் இயக்குனர் கேபிள் சங்கர், பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி, தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ்,  ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்படங்களில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆறு அத்தியாயத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படம் ஆறு வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. வழக்கமாக வித்தியாசமான கதைக்களத்தை அமைத்து க்ளைமேக்சில் ஒரே முடிவாக அமையாமல் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தனித்தனி முடிவை தந்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபல இயக்குனரான எஸ்எஸ் ஸ்டான்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ கதாநாயகன் தமன், ‘விஜய் டிவி' விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா போன்றவர்களுடன் பல புதுமுகங்களை இந்த படத்தில் இணைத்துள்ளனர். பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும், ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்திற்கு தாஜ்நூர்,  ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். படத்தின் ப்ரோமோ பாடலை இசையமைப்பாளர்  சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை 'விஜய் டிவி' மாகாப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். முன்னதாக இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலரை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வெளியிட்டுள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்த்த இயக்குனர் பாரதி ராஜா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டியுள்ளனர்.

தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வெளியிட்ட 6 அத்தியாயம் படத்தின் ட்ரைலர்