ads

17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பில் களமிறங்கும் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்

actor dinesh new movie

actor dinesh new movie

ராக்காயி கோவில், நம்ம ஊரு பூவாத்தா, பெரிய கவுண்டர் பொண்ணு, நாடோடி மன்னன், கட்ட பொம்மன், மாப்பிள்ளை கவுண்டர் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிக்கும் பணியில் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆக உள்ளார். 

இந்த படத்தின் நாயகனாக அட்டகத்தி, ஒருநாள் கூத்து, திருடன் போலீஸ், விசாரணை போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகர் தினேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ரகுநந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்க விருக்கும் நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ராஜபுஷ்பா பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த  படத்திற்கு 'களவாணி மாப்பிள்ளை' என பெயர் வைத்துள்ளனர்.

17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பில் களமிறங்கும் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்