அதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்

       பதிவு : Nov 15, 2017 09:10 IST    
அதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்

'அட்டகத்தி' படத்தின் மூலம் பேசப்பட்டு ரசிகர்கள் மனதினை பிடித்த தினேஷ் ரவி தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். அட்டகத்தி படத்தினை அடுத்து திணேஷ் ரவிக்கு எந்த வித படமும் கைகொடுக்காத போதும் அவருடைய நடிப்பு திறன் பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திருடன் போலீஸ் டீம் உடன் இணைந்துள்ளார்.     

கார்த்திக் ராஜு எழுதி இயக்கும் 'உள்குத்து' படத்தில் நாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகியாக அட்டகத்தியில் நடித்த நந்திகா சுவேதா நடித்துள்ளார். அட்டகத்தி படத்தின் மூலம் இவர்களின் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததின் காரணத்தில் இரண்டாவது முறை இணைந்துள்ளனர்.    

 

தினேஷ் இதுவரை சாப்டான கேரட்டரில் நடித்து வெளிவந்த படத்தினை தாண்டி தற்பொழுது அதிரடி த்ரில்லர் படத்தில் களமிறங்கி இருப்பதை உணரும் வகையில் புது போஸ்டரில் சரத் லோஹிதஷ்வா-வை கழுத்தை நெறிக்கும் காட்சி மிரள வைக்கும் அளவிற்கு இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து உருவாக்கி உள்ள இப்படத்தில் பால சரவணன், ஜான் விஜய், சாய சிங்க், திலீப் சுப்பாராயன் மற்றும் சிலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் பிகே.வர்மன் ஒளிப்பதிவு, பிரவீன்.கேஎல் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தினை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட உள்ளனர்.       

 


அதிரடி த்ரில்லரில் களமிறங்கிய - அட்டகத்தி நாயகன்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்