ads

வெளியானது சூப்பர் ஸ்டாரின் 2.0 பிரமாண்ட டீசர்

ஒரு வழியாக சூப்பர்ஸ்டாரின் 2.0 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஒரு வழியாக சூப்பர்ஸ்டாரின் 2.0 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் கூட்டணியில் சிவாஜி, எந்திரன் படங்களுக்கு பிறகு அடுத்ததாக வெளியாகவுள்ள பிரமாண்ட படம் '2.0'. கடந்த 2010இல் வெளியான 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டிற்காக ரசிகர்கள் நீண்ட வருடங்களாக காத்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசரை எதிர்பார்த்து பல முறை ரசிகர்கள் ஏமாந்து போனார்கள்.

இந்நிலையில் மறுபடியும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு தேதியினை படக்குழு அறிவித்தது. இதன்படி இந்த படத்தின் டீசர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதை 'நம்பலாமா நம்பக்கூடாதா' என்று சந்திரமுகி வடிவேலுவை போன்று ரசிகர்கள் கேலி செய்து வந்த நிலையில் ஒரு வழியாக இன்று 9மணியளவில் இந்த படத்தின் 3D இல் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் மியூசியத்தில் பொருட்காட்சியாக வைக்கப்பட்டிருந்த சிட்டி ரோபோ, ரிச்சர்ட் என்ற சிட்டு குருவி வில்லனை அழிக்க மறுபடியும் உருவாக்க படுகிறது.

இது தவிர முந்தைய பாகத்தில் வில்லனாக இருந்த ரோபோவும் இந்த படத்தில் மீண்டு வந்துள்ளது. இன்று உலகமே நவீன தொழில்நுட்பம் எனப்படும் செல்போன் மையமானதால் சிட்டு குருவி என்ற இனமே அழிவின் உச்சத்தில் உள்ளது. செல்போன் மூலமாக நேரும் ஆபத்துக்களை அறிந்திருந்தும் நாம் சமூக அக்கறை இல்லாமல் அதை தேடி தான் ஓடி கொண்டிருக்கிறோம். இதனை மக்களுக்கு உணர்த்தும் விதமாக 2.0 படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை தொடர்ந்து இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

வெளியானது சூப்பர் ஸ்டாரின் 2.0 பிரமாண்ட டீசர்