ads
தீபாவளிக்கு முன்பே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் 2.0 படக்குழு
வேலுசாமி (Author) Published Date : Oct 25, 2018 17:42 ISTபொழுதுபோக்கு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் '2.0'. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியினையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் ட்ரைலர் வரும் நவம்பர் 3ஆம் தேதி தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாகவுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வில்லனாகவும், அவரை எதிர்க்கும் சிட்டி ரோபோவாக சூப்பர் ஸ்டாரையும் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் போன்ற பலர் நடித்துள்ளனர். இதுதவிர 'எந்திரன்' படத்தில் சனா கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராயும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் இசைப்புயலின் இசையமைப்பில் லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ளது.