ads
பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட ரிலீஸ்
வேலுசாமி (Author) Published Date : Sep 26, 2018 10:53 ISTபொழுதுபோக்கு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படம் வரும் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'பேட்ட' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.
படத்தின் தலைப்பிற்கேற்ப இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலும் அசத்தலான நடிப்பையும் மீண்டும் காட்டும் விதமாக லோக்கலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது தவிர இந்த படத்தில் மிசா கைதியாக நடித்துள்ளதாக சமீபத்தில் வெளியான ரஜினியின் புகைப்படம் வைரலாகி வந்தது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாஸுதீன் சித்திக் போன்ற முன்னணி திரைபிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு நடுவே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை வரும் பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், அடுத்ததாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.