ads

மோகன்லாலை எதிர்த்ததால் என்னுடைய பட வாய்ப்புகளை தடுக்கின்றனர்

நடிகை ரம்யா நம்பீசன், மோகன்லாலுக்கு எதிராக விமர்சனங்கள் செய்ததால் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை ரம்யா நம்பீசன், மோகன்லாலுக்கு எதிராக விமர்சனங்கள் செய்ததால் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் சங்க தலைவரான மோகன்லால், நடிகை கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்ததால் மோகன்லால் மீது ஏராளமான சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களை முன்வைத்தனர். மோகன்லாலை எதிர்த்து நடிகை ரம்யா நம்பீசீனும் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த விவகாரம் கேரளா சினிமாவையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ரம்யா நம்பீசன் மோகன்லாலை எதிர்த்ததால் அவர் சினிமாவில் இருந்து தள்ளிவைக்கப்படுவதாகவும், அவருக்கு வரும் புதிய பட வாய்ப்புகளை சிலர் தடுப்பதாகவும் புகார் வந்துள்ளது.

இது குறித்து சமீபத்தில் நடந்த வழக்கறிஞர் கூட்ட சங்கத்தில் பேசிய நடிகை ரம்யா நம்பீசன் "நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்ததால் என்னுடைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன். இதனால் எனக்கு நிறைய பிரச்சனைகள் வருகின்றன. புதிய படங்களில் நடிக்க விடாமல் சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தடுக்கின்றனர். ரம்யா நம்பீசன், படப்பிடிப்பிற்கு நேரத்திற்கு வரமாட்டார், படப்பிடிப்பில் நிறைய தொல்லைகளை கொடுப்பார் என தவறான செய்திகளை பரப்பி படவாய்ப்புகளை கிடைக்க விடாமல் தடுக்கின்றனர்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மோகன்லாலை எதிர்த்ததால் என்னுடைய பட வாய்ப்புகளை தடுக்கின்றனர்