ads
கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்பிர் கபூர் நடிக்கும் '83'
வேலுசாமி (Author) Published Date : Nov 07, 2017 12:19 ISTபொழுதுபோக்கு
இன்றைய இளைஞர்கள் மற்றும் அனைத்து மக்களிடையே கிரிக்கெட் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டாக இருக்கிறது. கிரிக்கெட் இளைஞர்கள் மத்தியில் வாழ்க்கையாகவே மாறிவிட்டது. அதற்கு காரணம் 1983-இல் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் தலைமையில் உலக கோப்பையை கைப்பற்றியது இந்தியா. இது வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். அதிலிருந்து கிரிக்கெட் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதன் பின் 2011-இல் இந்தியா தோனி தலைமையில் உலக கோப்பையை கைப்பற்றியது. இன்று உலக கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தை பிடித்து சிறந்து விளங்குகிறது.
இந்த 1983-இல் இந்தியா உலக கோப்பை வெற்றி பெற்றதை மையப்படுத்தி தற்போது இந்தியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இந்திய அணிக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது. எப்படி போராடி வென்றது என்பதை படமாக காண்பிக்க உள்ளனர். சினிமா துறையில் தோனி, சச்சின் போன்ற வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக காண்பித்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்திற்காக 1983-இல் பங்கேற்ற அனைத்து வீரர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளது. இதனால் வீரர்களின் பெயர்கள் மற்றும் காட்சிகளை திரையிடலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தை ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கபீர் கான் இந்த படத்தை இயக்குகிறார். கபில் தேவ்-ஆக நடிகர் ரன்பிர் கபூர் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் 2019-இல் ஏப்ரலில் வெளிவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு 1983-இல் உலக கோப்பை வென்றதால் தலைப்பை '83' என்று வைத்துள்ளனர்.