ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சென்னை டு சிங்கப்பூர் நாயகி அஞ்சு

       பதிவு : Feb 14, 2018 14:01 IST    
libra productions new movie libra productions new movie

பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் விஜயராஜ். தற்போது இவருடைய இயக்கத்தில் புது படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க உள்ளார்.

இந்த படம் லிப்ரா ப்ரொடக்சன் நிறுவனத்தின் நான்காவது படமாக உருவாக உள்ளது. தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் தற்போது 'நட்புனா என்னானு தெரியுமா' படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து விஜயராஜ் இயக்கும் புது படத்தை தயாரிக்க உள்ளார்.

 

விஜயராஜ் இயக்குனராக அறிமுகமாகவுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் மற்றும் தொகுப்பாளரான அதில் நடிக்க உள்ளார். அதில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் இந்த படத்தில் நாயகியாக 'சென்னை டு சிங்கப்பூர்' படத்தின் கதாநாயகி அஞ்சு குரியன் நடிக்க உள்ளார்.

இவர்களுடன் ஈரோடு மகேஷ், விஜய் டிவி குரேஷி, ஈஸ்வர் ரகுநந்தன், நிம்மி எமனுவேல் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை வனிதா பிக்ச்சர்ஸ் மற்றும் லிப்ரா ப்ரொடக்சன் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

 

libra productions new movielibra productions new movie
libra productions new movielibra productions new movie

ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சென்னை டு சிங்கப்பூர் நாயகி அஞ்சு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்