ads

உலகத்தையே காதலில் சிக்க வைத்த 'டைட்டானிக்' படம் வெளியான நாள் இன்று

titanic movie history

titanic movie history

'டைட்டானிக்' திரைப்படம் உலக மக்கள் அனைவராலும் மறக்கமுடியாத காதல் திரைப்படமாகும். இந்த படம் 1997-ஆம் ஆண்டு இதே நாள் டிசம்பர் 19-இல் வெளிவந்தது. இந்த படத்தை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நாயகனாக லியோனார்டோ டிகாப்ரியோ நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கேட் வின்ஸ்லெட் நடித்துள்ளார். இந்த படத்தை பேரமோன்ட் பிக்ச்சர்ஸ், 20 செஞ்சுரி பாக்ஸ் மற்றும் லைக்ட்ஸ்டோர்ம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ஜேம்ஸ் லாண்ட் ஆகியோர் தயாரித்திருந்தனர். தொடக்கத்தில் இந்த படத்தை ஜூலை 2-ஆம் தேதி வெளியிட முடிவு செய்தனர். 

ஆனால் தயாரிப்பு தாமதமாக டிசம்பர் 19-இல் வெளியிடப்பட்டது. இந்த படம் தள்ளி வைக்கப்பட்டபோது இந்த படம் தோல்வியடையப்போவதாக பல்வேறு ஊடகங்கள் நம்பியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக விமர்சனங்கள் மற்றும் வணிக அடிப்படையில் படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும் 14 அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் சிறந்த படத்துக்கான விருது உள்பட 11 விருதுகளை பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. உலக அளவில் வசூலில் இதுவரை இல்லாதா அளவிற்கு 1.84 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டி சாதனை புரிந்தது. இதனை அடுத்து இவரது இயக்கத்தில் 2010-இல் வெளிவந்த 'அவதார்' திரைப்படம் இந்த சாதனை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது. 'டைட்டானிக்' படத்தின் 3D வர்சன் 2012-இல் வெளிவந்து உலகம் முழுவதும் 2.8 பில்லியன் வசூலை ஈட்டியது. 'அவதார்' படத்திற்கு பிறகு 2பில்லியன் வசூலை தொட்ட படமாக 'டைட்டானிக்' விளங்குகிறது.  

உலகின் மிகப்பெரிய பயணிகள் கொண்ட நீராவி கப்பலான 'ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS TITANIC)' முதற் பயணத்தின் போதே வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றின் மீது மோதி கடலுக்குள் மூழ்கியது.  இந்த விபத்தில் சுமார் 1517 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'டைட்டானிக்' படத்தை இயக்குவதாக ஜேம்ஸ் கேமரூன் முடிவு செய்தார். படத்தில் சுவாரஸ்யம் இருக்க வேண்டும் என்று காதல் கதையை படத்தில் கலந்தார். தற்போதுவரை காதல் என்றால் டைட்டானிக் என்ற பெயர் தான் நினைவுக்கு வரும். 'ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS TITANIC)' கப்பலானது ஆடம்பரிய பயணிகளின் கப்பலாகும். இந்த கப்பல் வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவாக்கப்பட்டது. 

இந்த கப்பல் முதன் முதலாக 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன் கிழமை கேப்டன் எட்வார்ட் ஸ்மித் தலைமையில் தொடங்கியது. சுமார் 2223 பயணிகளுடன் நியூயார்க்கை நோக்கி புறப்பட்டது. ஏப்ரல் 14-ஆம் தேதி வெப்பநிலை குறைந்து உறைநிலையை அடைந்தது. 1:45 மணிக்கு 'அமெரிக்கா' என்ற கப்பலில் இருந்து 'டைட்டானிக்' கப்பலுக்கு வழியில் பனிப்பாறைகள் இருப்பதாக செய்தி அனுப்பப்பட்டது.  ஆனால் இந்த செய்தி டைட்டானிக் கப்பலுக்கு வந்து சேரவில்லை. இதனால் இரவு 11.40 மணிக்கு பனிப்பாறை ஒன்றுடன் பலமாக மோதியது. பிறகு கப்பலில் இருந்த உயிர் காப்பு படகுகள் மூலம் சிலர் உயிர் தப்பினர். முதல் படகு 12:40 மணிக்கு இறக்கப்பட்டது. இதனை அடுத்து சரியாக 2:20 மணிக்கு 'டைட்டானிக்' கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 2223 பேரில் 706 பேர் மட்டும் உயிர் தப்பினர். எஞ்சிய 1517 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பில் பெரும்பாலானோர் (-2 °C) உறைநிலையை தாங்கமுடியாமல் உயிரிழந்துள்ளனர். மில்வினா டீன் என்பவர் மூழிகிய 'டைட்டானிக்' கப்பலில் பயணம் செய்த கடைசி பயணி ஆவார். பயணம் செய்துள்ளவர்களில் மிகவும் குறைந்த வயதுடையவர் (இரண்டு வயது) என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தையே காதலில் சிக்க வைத்த 'டைட்டானிக்' படம் வெளியான நாள் இன்று