ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்

       பதிவு : Nov 09, 2017 19:10 IST    
ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்

பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் சென்னையில் இன்று மாரடைப்பால்  காலமானார். மறைந்த திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை படத்தின் மூலம் திறையுலகிற்கு அறிமுகமானவர். 1995 வரை பல பிரபல இயக்குனர்களுடன் பணி புரிந்த ப்ரியன்,  மணி ரத்னம் இயக்கிய பகல் நிலவு, நாயகன்  ஆகிய திரைப்படங்களிலும், சுரேஷ் மேனன் மற்றும் ராஜிவ் மேனன் ஆகியோருடன் விளம்பரம், தொலைக்காட்சி தொடர்களுக்கும் இவர் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றயுள்ளார்.

1995 வரை துணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இவர், கே. எஸ். அதியமான் இயக்கிய 'தொட்டா சினிங்கி' திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக பணியை தொடஙியவர். பொற்காலம், தேசிகீதம், வெற்றிக்கொடிகட்டு,    தெனாலி, உதயா, வேலாயுதம், ஜில்லா போன்ற திரைப்படங்களுக்கு  ஒளிப்பதிவாளராக பணிப்புரிந்தவர்.

 

ப்ரியன், பிரபல இயக்குனர் ஹரி இயக்கிய பதிமூன்று திரைப்படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்த்துள்ளார், அவை  1. தமிழ், 2. சாமி,  3. கோவில், 4. அருள், 5. ஐயா, 6. ஆறு, 7.தாமிரபரணி, 8. வேல் 9. சேவல், 10. சிங்கம், 11. சிங்கம் 2,  12. பூஜை, 13. சிங்கம் 3. ஹரி தற்போது இயக்கி வரும் சாமி 2 திரைப்படத்திற்கும் ப்ரியன் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது 

திரைப்பட இயக்குநர் மோகன் ராஜா, நடிகைகள் திரிஷா,  கீர்த்தி சுரேஷ், மற்றும்  பல பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.  

 


ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்