நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை

       பதிவு : Mar 28, 2018 15:47 IST    
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமி வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமி வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பிரபல முன்னாள் நடிகர் பிரசாந்த் தற்போது 'ஜானி' என்ற படத்தில் நடித்து வருகிறார். 44 வயதான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய முன்னாள் மனைவி கிரகலட்சுமி ஆவார். கிரகலட்சுமி, தற்போது தனது பெற்றோர்கள் தனசேகரன், சிவகாமி சுந்தரி மற்றும் தனது சகோதரர்கள் பொன்குமார், நாகராஜ் ஆகியோருடன் சென்னை, மாம்பழம் பகுதியில் வசித்து வருகிறார்.

நடிகர் பிரசாந்துக்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் இவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் நிகழ்ந்து இரண்டாவதாக பிரசாந்தை திருமணம் செய்து கொண்டதால் இருவருக்கும் விவாகரத்து அளிக்கப்பட்டு தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.  இந்த பிரச்சனை இருக்க மறுபுறம் கிரகலட்சுமியின் சகோதரரான பொன்குமாரின் மனைவி அபிராமி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

 

இவரின் தற்கொலைக்கு கிரகலட்சுமி உள்பட குடும்ப உறுப்பினர்களின் தூண்டுதலே காரணம் என்று மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கிரகலட்சுமி வீட்டில் மர்ம நபர்கள் நுழைந்து 170 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சென்னை மாம்பழம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்