ads

தீயாய் பரவும் தல 59 வதந்திகள் - குழப்பத்தில் ரசிகர்கள்

தீயாய் பரவும் தல 59 வதந்திகள் - குழப்பத்தில் ரசிகர்கள்

தீயாய் பரவும் தல 59 வதந்திகள் - குழப்பத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 'விசுவாசம்' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியீடு குறித்த பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் விசுவாசம் படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வரும் நிலையில் 'தல 59' படத்திற்கான வதந்திகள் தீயாய் பரவி வருகின்றது. இந்தியில் 2016இல் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக 'தல 59' உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

மறுபுறம் 'தல 59' பிங்க் படத்தின் ரீமேக் இல்லை என்றும் இயக்குனர் வினோத்தின் போலியான டிவிட்டர் கணக்கின் மூலம் வதந்திகள் பரவியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஒரே குழப்பத்தில் தவித்து வருகின்றனர். இது போன்ற வதந்திகளை தவிர்க்க விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டால் நல்லது.

தீயாய் பரவும் தல 59 வதந்திகள் - குழப்பத்தில் ரசிகர்கள்