ads
இணைதளத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி
வேலுசாமி (Author) Published Date : Feb 22, 2018 12:08 ISTபொழுதுபோக்கு
பிரபல ஹாலிவுட் நடிகரான சில்வஸ்டர் ஸ்டோலன் கிட்டத்தட்ட 1969-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 48 வருடங்களாக திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக 70 கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
இவர் ராம்போ, எஸ்கேப் பிளேன், எக்ஸ்பண்டபிள்ஸ் போன்ற படங்கள் மூலம் உலகெங்கும் அறியப்படுகிறார். இவருடைய நடிப்பில் இறுதியாக 'Guardians of the Galaxy Vol. 2' படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் 'Stakar Ogord' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் தற்போது 'Escape Plan 2: Hades' மற்றும் 'Escape Plan 3' போன்ற படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் புற்று நோயால் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவர தொடங்கியது. தகவல் வெளிவந்த சில மணி நேரங்களிலே உலகெங்கும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவருடைய இழப்பிற்கு வருத்தத்தை பதிவு செய்து வந்தனர். ஆனால் இந்த செய்தியை சில்வஸ்டர் ஸ்டாலனின் சகோதரர் பிராங்க் ஸ்டாலோன் மறுத்துள்ளார்.
இது குறித்து அவருடைய டிவிட்டர் தலத்தில் "என்னுடைய சகோதரர் பாதுகாப்பாக தான் இருக்கிறார். என்னுடைய சகோதரர் இறந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. இந்த செய்து என்னுடைய அம்மாவை வேதனை அடைய செய்துள்ளது. இத்தகைய இரக்கமற்ற செய்தியை எதற்காக பரப்பி வருகின்றனர் என்று தெரியவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.