ads
பிரபாஸ் பிறந்த நாளில் சாஹு மேக்கிங் வீடியோ
வேலுசாமி (Author) Published Date : Oct 22, 2018 17:49 ISTபொழுதுபோக்கு
'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில் 'சாஹு' படம் உருவாகி வருகிறது. பாகுபலி 2விற்கு பிறகு பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக பிரபாஸ் ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டில் திரைக்கு வரவுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் பிரபாஸ் பிறந்த நாளில் வெளியாவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வந்தன.
ஆனால் தற்போது இந்த படத்தின் மேக்கிங் விடியோவை பிரபாஸ் பிறந்த நாளில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. நாளை (அக்டொபர் 23) பிரபாஸ் பிறந்த நாள் என்பதால் 'சாஹு' படத்தின் டீஸருக்காக காத்திருந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் விடியோவை நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் நாளை 'Shades of Saaho' விடியோவை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.