நடிகர் சல்மான் கானின் கிக் 2 அதிகாரபூர்வ அறிவிப்பு

       பதிவு : Feb 07, 2018 11:10 IST    
salman khan kick 2 movie new announcement salman khan kick 2 movie new announcement

தெலுங்கில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளிவந்த கிக் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. தமிழில் இந்த படத்தை 'தில்லாலங்கடி' என்ற தலைப்பில் வெளியானது. இந்த படத்தில் ஜெயம் ரவி, தமன்னா, வடிவேலு, சந்தானம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இந்தியில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சல்மான் கான் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு 'கிக் (Kick)' என்ற பெயரில் வெளியானது.

இந்த படத்தை இயக்குனர் சாஜித் நாதியத்வாளா இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஜாக்லின் பெர்னாண்டஸ் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் சாஜித் நாதியத்வாளா முடிவு செய்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 

கிக் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை நாதியத்வாளா கிராண்ட்சன் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது நடிகர் சல்மான் கான் நடிப்பில் 'டைகர் ஜின்டா ஹே' படம் தற்போது வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து வருகிறது. சல்மான் கானின் ரசிகர்கள் அடுத்த அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது 'கிக் 2' படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

kick 2 movie new announcementkick 2 movie new announcement

நடிகர் சல்மான் கானின் கிக் 2 அதிகாரபூர்வ அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்