ads

பப்பி மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டே

கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டேவின் முதல் தமிழ் படத்திற்கு பப்பி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டேவின் முதல் தமிழ் படத்திற்கு பப்பி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016இல் கன்னட மொழியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'க்ரிக் பார்ட்டி'.ரக்ஷிதா செட்டி, ரேஷ்மிகா மந்தனா, சம்யுக்தா ஹெக்டே ஆகியோரது நடிப்பில் இந்த படம் நல்ல வசூலை பெற்று தந்தது. இந்த படத்தின் மூலம் அறிமுக நாயகியாக என்ட்ரி கொடுத்த சம்யுக்தா ஹெக்டே கன்னட ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். இதன் பிறகு இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தெலுங்கில் வெளியான இந்த படத்திலும் சம்யுக்தா ஹெக்டே நடிப்பு ரசிகர்களிடம் பேசும்படியாக அமைந்தது. இவர் தற்போது கன்னடம், தெலுங்கு மொழியை தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். அறிமுக இயக்குனரான நட்டு தேவ் என்பவர் இவரை வைத்து 'பப்பி' என்ற படத்தை உருவாக்க உள்ளார். இவர் 'காக்கா முட்டை' இயக்குனரான மணிகண்டனின் உதவி இயக்குனராவர். இவருடைய இயக்கத்தில் உருவாகவுள்ள முதல் படம் படத்தின் தலைப்பிற்கேற்ப நாய்களை சார்ந்ததாக உருவாக உள்ளது.

பப்பி மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டே