ads
சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்
வேலுசாமி (Author) Published Date : Oct 24, 2018 18:02 ISTபொழுதுபோக்கு
காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் நடிப்பில் கடந்த 2016இல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'தில்லுக்கு துட்டு'. இந்த படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சந்தானம், அஞ்சல் சிங், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ், கருணாஸ் போன்ற பல நடிகர்கள் காமெடியில் அசத்தியிருந்தனர்.
ஹாரர் கலந்த காமெடி படமான இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மும்முரமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இந்த படத்திலும் நடித்து வருகின்றனர். ஆனால் ஹீரோயினை மற்றும் படக்குழு மாற்றியுள்ளது. அஞ்சல் சிங்கிற்கு பதிலாக மலையாள நடிகையான ஷ்ரிதா சிவதாஸ் என்பவர் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராமர் மற்றும் தனசேகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டீசரையும் வரும் 29ஆம் தேதியில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தினை ஹேண்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஷபீர் என்பவர் இசையமைத்து வருகிறார்.
Here it is #DhillukuDhuddu2Firstlook & Teaser from Oct 29th ðŸ™ðŸ˜Š pic.twitter.com/NESI67JNut
— Santhanam (@iamsanthanam) October 24, 2018