ads

கருணாநிதி மறைவிற்காக அமெரிக்காவில் படப்பிடிப்பை நிறுத்திய சர்கார் படக்குழு

கருணாநிதி மறைவினை மரியாதை செலுத்தும் விதமாக சர்கார் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது.

கருணாநிதி மறைவினை மரியாதை செலுத்தும் விதமாக சர்கார் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் போராடி நேற்று இரவு 6:10 மணியளவில் உயிர் திறந்துள்ளார். இவரின் மறைவை தாங்க முடியாமல் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். தற்போது சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியை புதைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவிற்கு பிறகு அவரை அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அரசியலின் மூத்த தலைவரான கலைஞர் கருணாநிதி மறைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் படப்பிடிப்பை நடத்தி வரும் சர்கார் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது. முன்னதாக கருணாநிதி உடல்நிலை மோசமாக இருந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் வந்து முக ஸ்டாலினை சந்தித்து சென்றார்.

இந்நிலையில் அமெரிக்காவில் லாஸ் வெகாஸில் மும்முரமாக நடைபெற்று வந்த சர்கார் படப்பிடிப்பை கருணாநிதி மறைவை ஒட்டி நிறுத்தியுள்ளது. இன்னும் சில தினங்களில் மீண்டும் அமெரிக்காவில் சர்கார் படத்தின் ஆக்சன் காட்சிகளை படமாக்க உள்ளனர்.அரசியல் ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

கருணாநிதி மறைவிற்காக அமெரிக்காவில் படப்பிடிப்பை நிறுத்திய சர்கார் படக்குழு