ads

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பிறந்த நாளில் சர்கார் டீசர்

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் டீசர் செப்டம்பர் 25இல் வெளியாகவுள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் டீசர் செப்டம்பர் 25இல் வெளியாகவுள்ளது.

ஸ்பைடர் படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'சர்கார்'. கத்தி, துப்பாக்கி படங்களுக்கு பிறகு விஜயுடன் மீண்டும் இணைந்துள்ள கூட்டணியில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக மும்முரமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ள நிலையில் டப்பிங் பணிகளையும் விரைவில் முடிக்க விறுவிறுப்பாக களமிறங்கியுள்ளது.

சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்திருந்தார். இவருக்கு பிறகு மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களுக்கு பிறகு விஜயின் 'சர்கார்' படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை அவ்வப்போது சன் பிக்ச்சர்ஸ் இணையத்தில் வெளியீட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

வரும் தீபாவளியில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் அக்டொபர் 2இல் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் டீசர் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இயக்குனர் ஏஆர் முருகதாஸின் 44வது பிறந்த நாள் என்பதால் அந்நாளில் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பிறந்த நாளில் சர்கார் டீசர்