சசியின் கொடிவீரன் வெளியீடு

       பதிவு : Oct 31, 2017 11:14 IST    
சசியின் கொடிவீரன் வெளியீடு

குட்டி புலி படத்தினை இயக்கிய முத்தையா 'கொடிவீரன்' படத்தின் மூலம் சசியுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் முன்னதாகவே பஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் இசை வெளிவந்து ரசிகர்களுக்கிடையில் அதிகளவு எதிர்பார்ப்பினை தந்துள்ளது.   

சசி குமார் தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சனுஷா, விதார்த், பாலா சரவணன், போன்றவர்கள் நடிப்பதோடு பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  

 

இது வரை நடித்திராத அண்ணன் - தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார் புது வித தோற்றத்தில் ஈடுப்பட்டிருக்கிறார். இதில் அதிகளவு சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்த இப்படத்திற்கு எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு மற்றும் வெங்கட் ராஜன் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர்.    

தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்த இப்படம் சில காரணங்களால் வெளியீட்டினை மாற்றப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 30ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

 


சசியின் கொடிவீரன் வெளியீடு


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்