ads

கலையரசன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் சீரியல் நடிகை வாணி போஜன்

தெய்வ மகள் சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகை வாணி போஜன் கலையரசன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

தெய்வ மகள் சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகை வாணி போஜன் கலையரசன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

கார்த்தியின் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமான கலையரசன் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், காலக்கூத்து படங்களுக்கு பிறகு சைனா, பட்டினம்பாக்கம், களவு, டைட்டானிக், முகம் போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த கலையரசன் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடிக்க உள்ள புது படத்திற்கு 'N4' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தினை லோகேஷ் குமார் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு பசங்க 2, சவரக்கத்தி, துப்பறிவாளன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள அரோல் கரோலி இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக சீரியல் நடிகையான வாணி போஜன் நடிக்க உள்ளார். 'தெய்வ மகள்' சீரியல் மூலம் பிரபலமான இவர் தற்போது கிங்ஸ் ஆப் காமெடியன்ஸ் ஜூனியர் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

கலையரசனின் 'N4' படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு நாயகியாக அறிமுகமாக உள்ளார். கவுதம் என்பவர் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை காசிமேடு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் பணிபுரியவுள்ள இதர நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட உள்ளது.

கலையரசன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் சீரியல் நடிகை வாணி போஜன்