சித்தார்த்தின் அவள் தெலுங்கின் வெளியீடு

       பதிவு : Nov 04, 2017 13:55 IST    
gruham gruham

விசாகம் 18 மோஷன் பிக்ச்சர் மற்றும் சித்தார்த்தின் எட்டாகி என்டர்டைன்மெண்ட் மில்லின்ட் தயாரிப்பில், மில்லின்ட் ராவ் இயக்கிய 'அவள்' படம் வெளிவந்தது. சித்தார்த் அதிரடி கலந்த த்ரில்லர் வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் பேசப்பட்டும் அளவிற்கு இருக்கும் என்று   எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தல் ஆண்ரியா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் – அவள், ஹிந்தி – ஹவுஸ் நெக்ஸ்ட் டோர், தெலுங்கு – கிருஹம் என்ற தலைப்பில் மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்டு, நவம்பர் 3ம் தேதி வெளியிடுவதாக இருந்தது. இந்நிலையில் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் மட்டும் வெளியானது. தெலுங்கில் போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் படத்தினை வெளியிட முடியவில்லை.

 

தெலுங்கில் சித்தார்த் நடித்து  நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதன் காரணத்தினால்   'கிருஹம்' அதிரடி த்ரில்லர் படத்தின் மூலம் தெலுங்கில் ஒரு புது இடத்தினை தக்கவைத்து கொள்ளலாம் என்று நினைத்த சித்தார்த், தியேட்டர் இல்லாததால் இப்படத்தின் வெளியீட்டை மாற்றப்பட்டது. இந்நிலையில் படத்தினை வருகிற 10ம் தேதி திரைக்கு வரயிருப்பதாக படக்குழுவினர் கூறினார்..       


சித்தார்த்தின் அவள் தெலுங்கின் வெளியீடு


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்