செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்

       பதிவு : Jun 06, 2018 12:50 IST    
நடிகர் சிம்பு நடிப்பில் செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு உருவாகவுள்ள படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு உருவாகவுள்ள படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான சிம்பு ஏஏஏ படத்திற்கு பிறகு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இந்த படத்தை இயக்குனர் மணி ரத்னம் இயக்கி வருகிறார். தொழிற்சாலை அபாயங்களை உணர்த்தும் விதமாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்புவின் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த சிம்பு தனது படப்பிடிப்பை முடிந்துவிட்டதால் இன்னும் இரண்டு நாட்களில் சென்னை திரும்புகிறார்.

பின்னர் ஒரு மாதம் ரெஸ்ட் எடுத்த பிறகு ஓவியா நடித்து வரும் 90எம்எல் படத்தின் இசையமைப்பு பணிகளை முடிக்க உள்ளார். இதன் பிறகு தன்னுடைய 34வது படத்திற்காக வீரம், பைரவா போன்ற படங்களை தயாரித்துள்ள விஜயா ப்ரொடக்சன் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார். இதனை தொடர்ந்து தன்னுடைய 35வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாக உள்ளது.

 

இந்த படத்திற்கு 'விண்ணைத்தாண்டி வருவேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 'தொட்டி ஜெயா' படத்தை தயாரித்து கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள புதுப்படத்திலும் நாயகனாக நடிக்க உள்ளார். சர்ச்சை நாயகனாக இருந்து வந்த சிம்பு தற்போது சமூக பிரச்சனைகளில் தொடர்ந்து நல்ல கருத்துக்களை பதிவு செய்தும், மக்களுக்காக குரல் கொடுத்ததும் வருவதால் தற்போது இவருக்கு ஏராளமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் இவருடைய படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.


செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்