×

Entertainment

Technology

ads

மகத் வெளியே வந்ததும் சிம்பு கொடுத்த அடிய பாருங்க

பிக்பாஸில் இருந்து மகத் வெளியே வந்த பிறகு சிம்பு அவரை போட்டு வெளுத்துள்ளார். இது குறித்த விடியோவை மகத் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸில் இருந்து மகத் வெளியே வந்த பிறகு சிம்பு அவரை போட்டு வெளுத்துள்ளார். இது குறித்த விடியோவை மகத் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம், மகத் கொடுத்த அலப்பறைகளால் பிக்பாஸே பொறுக்க முடியாமல் ரெட் கார்ட் கொடுத்து அவரை வெளியேற்றினார்.  வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொருத்தரிடமும் வம்பிழுத்து வந்த அவரை சண்டையெல்லாம் மறந்து அனுதாபங்களுடன் மகத்தை வெளியேற்றினர். மகத் பிரிவினால் பிக்பாஸ் வீட்டில் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் மட்டும் வருத்தத்துடன் காணப்படுகின்றனர். ஆனால் மகத் வெளியே வந்ததும் மும்தாஜ் புதிய உற்சாகத்துடன் மல்லே மல்லே பாடலுக்கு ஆட்டம் ஆடி மகிழ்ந்தார்.

மேலும் ஏற்கனவே மகத் பிக்பாஸ் வீட்டிற்குள் சிம்பு மற்றும் அவருடைய  காதலியை பற்றி பேசியதற்காக மத்த ஹவுஸ் மேட்சிடம் சண்டை போட்டார். தற்போது அவர் வெளியே வந்ததும் சிம்பு அவரை போட்டு வெளுத்துள்ளார். மகத்தின் கோபத்தை பார்த்து சிம்புவே அதிர்ச்சி அடைந்துள்ளார். சிம்பு மகத்தை வெளுத்த விடியோவை அவருடைய டிவிட்டரில் 'நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் என்னுடைய நண்பன் சிம்பு கொடுத்த வரவேற்பை பாருங்க' என்று அந்த விடியோவை பகிர்ந்துள்ளார். 

ads

மகத் வெளியே வந்ததும் சிம்பு கொடுத்த அடிய பாருங்க

ads

ads