ads
பிக்பாஸ் பிரபலங்களுடன் செக்க சிவந்த வானம் படம்பார்த்த சிம்பு
மோகன்ராஜ் (Author) Published Date : Oct 03, 2018 15:11 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 27இல் வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் படம் 'செக்க சிவந்த வானம்'. விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இசைப்புயல் இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் மெலடி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினை நடிகர் சிம்பு சென்னை, சத்யம் சினிமாஸில் பிக்பாஸ் பிரபலங்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளார். பிக் பாஸ் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், மஹத், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா மற்றும் சீசன் 2வின் டைட்டில் வின்னர் ரித்விகா ஆகியோருடன் சிம்பு படம் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த படத்திற்கு பிறகு சிம்பு, தான் நடிக்கும் அடுத்த படத்தில் பிக் பாஸ் ஐஸ்வர்யாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் திரையில் இந்த ஜோடியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிறைவடைந்த நிலையில் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.