ads
அமெரிக்காவில் நான் நலமாக உள்ளேன் - பி.சுசிலா
வேலுசாமி (Author) Published Date : Nov 03, 2017 17:09 ISTபொழுதுபோக்கு
பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார் என்றும் அவர் இறந்துவிட்டதாகவும் பல பொய்யான தகவல்கள் வெளியானது. சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் வெளியானதை அடுத்து பி.சுசிலா "அமெரிக்காவில் நான் நலமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முன்னணி பாடகியாக விளங்குபவர் பி.சுசிலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கிட்டத்தட்ட 25,000 பாடல்களுக்கு மேல் பாடியவர். இவர் முதன்முதலில் 1950-இல் 'பாப்பா மலர்' என்ற நிகழ்ச்சியில் பாட தொடங்கினார். இதனை அடுத்து அவர் திறமையை கண்டு கே.எஸ்.பிரகாஷ்ராவ் 'பெற்றதாய்' படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து 'எதுக்கு அழைத்தாய்' என்ற பாடலை பாடினார். மேலும் 1950-இல் வெளிவந்த கணவனே கண்கண்ட தெய்வம் என்ற படத்தில் 'உன்னை கண் தேடுதே', 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடும்' போன்ற பாடல்கள் அவருக்கு பெருமை தந்தது. இவர் கடைசியாக 2008-ஆம் ஆண்டில் வெளிவந்த 'சில நேரங்களில்' என்ற படத்தில் 'பொட்டு வைத்த' என்ற பாடலை பாடினார்.
இவர் முதன் முதலில் 1969-ஆம் ஆண்டி அகில இந்திய பாடகிக்கான விருதை வாங்கினார். இதனை அடுத்து கம்பன் புகழ் விருது, இந்திய அரசின் பத்ம பூசன் விருது, ஐந்து முறை தேசிய அளவில் மிகசிறந்த பின்னணி பாடகி விருதையும் காலை மாமணி விருதையும் பெற்றார்.