ads

சிவகார்த்திகேயனின் கனா படத்தின் இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனை கனா படத்தின் இசையை வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனை கனா படத்தின் இசையை வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், 'கனா' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார். சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தினை சிவகார்த்திகேயன் நண்பர், நடிகர், பாடகர் மற்றும் தற்போது இயக்குனராக மாறியுள்ள அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் இருவருக்குமே முதல் படம்.

மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட்டை லட்சியமாக வைத்துள்ள ஒரு நடுத்தர குடும்ப பெண் எப்படி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கிறார் என்பது படத்தின் மைய கதை. இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருடைய அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையான ஸ்ம்ருதி மந்தனா வெளியிட உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் டி இமான், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன் இணைந்து கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா இந்த படத்தின் இசையை வெளியிட உள்ளார்.

Image Credit - @SKProdOffl (Twitter)Image Credit - @SKProdOffl (Twitter)
Image Credit - @SKProdOffl (Twitter)Image Credit - @SKProdOffl (Twitter)

சிவகார்த்திகேயனின் கனா படத்தின் இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை