ads

சிவகார்த்திகேயன் வெளியிட்ட களவாணி 2 படத்தின் டைட்டில் லோகோ

sivakarthikeyan release kalavani 2 movie title logo

sivakarthikeyan release kalavani 2 movie title logo

இயக்குனர் ஏ சற்குணம் அவர்கள் 2010ஆம் ஆண்டு வெளியான 'களவாணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் இயக்குனர் சற்குணம் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் தற்போதுவரை பேசும் படமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து வாகை சூடவா, நையாண்டி, சண்டி வீரன் போன்ற படங்கள் இயக்குனர் ஏ சற்குணம் இயக்கத்தில் வெளியானது. இதில் விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா படம் தமிழ் நாடு மற்றும் இந்திய அளவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.

'களவாணி' படத்தில் நடிகர் விமல், ஓவியா, சரண்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் நடிகை ஓவியாவின் முதல் படமாகவும் நடிகர் விமலுக்கு இரண்டாவது படமாகவும் அமைந்தது. இந்த படத்தை ஷெராளி பிலிம்ஸ் சார்பில் நாஸிர் தயாரித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'K2' என்ற லோகோவை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் ஏ சற்குணம் அவர்களின் சொந்த நிறுவனமான வர்மன்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் வரமன்ஸ் ப்ரொடக்சன் நிறுவனத்தின் முதல் படமாகும். இயக்குனர் சற்குணம் இயக்கும் இந்த படத்தின் மூலம் நடிகர் விமல் மற்றும் ஓவியா ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். மேலும் இந்த படம் இயக்குனர் சற்குணம் மற்றும் விமல் இணையும் மூன்றாவது படமாகும். நடிகர் விமல் களவாணி, வாகை சூடவா போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

தற்போது இந்த படமும் அவருக்கு சிறந்த படமாக விளங்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்மன்ஸ் ப்ரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் ஜெ ஜெயக்குமார் மற்றும் டிஆர் ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

sivakarthikeyan release k2 movie title logosivakarthikeyan release k2 movie title logo

சிவகார்த்திகேயன் வெளியிட்ட களவாணி 2 படத்தின் டைட்டில் லோகோ