ads

சிவகார்த்திகேயனின் படத்திற்கு நேர்ந்த கதி, எந்த படம், ஏன்?

சிவகார்த்திகேயனின் படத்திற்கு நேர்ந்த கதி

சிவகார்த்திகேயனின் படத்திற்கு நேர்ந்த கதி

கடந்த வருட இறுதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ஹீரோ. இரும்புத்திரை வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தான் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தையும் இயக்கினார். படம் ரிலீஸ் ஆகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஹீரோ படம் ரிலீஸ் ஆன பின்பு, உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு என்பவர் கதை திருட்டு வழக்கை தொடர்ந்தார். இந்த கதை தன்னுடைய கதை என்றும், இந்த படத்திற்கு தடை கோரியும் மனு தாக்கல் செய்தார். 

நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவராக இருப்பதால், இருவரையும் அழைத்து கதையை விசாரித்த பின், இரண்டு கதைக்கும் பெரிய அளவில் ஒற்றுமை இருக்கும் காரணத்தினால், கதை திருட்டாக தெரிவித்தார்.

நீதிமன்றத்திலும் இந்த வழக்கை விசாரித்தபின், பட உரிமையை வேறு மொழிகளுக்கு விற்கவோ அல்லது தொலைக்காட்சியில் மற்றும் டிஜிட்டல் இணையத்தளத்தில் ஒளிபரப்புவதை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் படங்களை மாத அல்லது வருடாந்திர சந்தா மூலம் பார்க்கும் வசதி கொண்ட அமேசான் பிரைம் இணையதளம் மற்றிம் செயலியில் இருந்து ஹீரோ படம் தற்பொழுது நீக்கப்பட்டது.

இது சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் நேர்ந்த கதி அல்ல, இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்திற்கும் இதே நிலை ஏற்பட்டது. இயக்குனர் பாக்யராஜ் இவர்கள் இருவருக்கும் சமாதானம் செய்து, பட ரிலீஸ் ஆகும்போது எந்த ஒரு தடைகளும் இன்றி இருதரப்பிற்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும் தனது நேர்மையான அணுகுமுறையால், யாருக்கும் நஷ்டம் ஏற்படாமல் சுமுகமாக பிரச்சனைகளை கையாள்வது இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் திறமை.

சிவகார்த்திகேயனின் படத்திற்கு நேர்ந்த கதி, எந்த படம், ஏன்?

சிவகார்த்திகேயனின் படத்திற்கு நேர்ந்த கதி, எந்த படம், ஏன்?