ads

சிவா மனசுல சக்தி இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்

இயக்குனர் ஆர் ரவிக்குமாரை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேசுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இயக்குனர் ஆர் ரவிக்குமாரை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேசுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது 'சீம ராஜா' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காமெடி நடிகராக சூரியும், நாயகியாக சமந்தாவும் நடித்து வருகின்றனர். இந்த படம் சமந்தாவுக்கு சிவகார்த்திகேயனுடன் இணையும் முதல் படமாகும்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 'இன்று நேற்று நாளை'  படத்தை  இயக்கிய ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் 'சீம ராஜா' படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து தயாரித்து வருகிறது.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். பிரபல பாடகர் மற்றும் சிவகார்த்திகேயன் நண்பரான அருண்ராஜா காமராஜா இயக்க உள்ள புது படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதுப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'சிவா மனசுல சக்தி' படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேசுடன் இணைய உள்ளார். தற்போது இயக்குனர் ராஜேஷ், நடிகர் சந்தானம் நடிக்க உள்ள புது படத்தை இயக்க உள்ளார். இதனை முடித்த பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளார். மேலும் இயக்குனர் ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா மனசுல சக்தி இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்